ஈக்விட்டி டெலிவரி என்றால் என்ன?

ஈக்விட்டி டெலிவரி அல்லது டெலிவரி அடிப்படையிலான டிரேடிங் என்பது பங்குச் சந்தையில் நீங்கள் டிரேட் செய்யக்கூடிய வழிகளில் ஒன்றாகும். ஒரு ஈக்விட்டி டெலிவரியில், நீங்கள் சில பங்குகளை வாங்கி உங்கள் டீமேட் கணக்கில் சிறிது நேரம் அவற்றை வைத்திருப்பீர்கள். டெலிவரி வர்த்தகத்தில், பங்குகள் உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட பிறகு, நீங்கள் விரும்பும் வரை அவற்றை வைத்திருக்கலாம். நீங்கள் வாங்கும் பங்குகளின் முழுமையான உரிமை உங்களிடம் உள்ளது மேலும் நல்ல இலாபத்தில் அவற்றை விற்பதற்கான தருணத்திற்காக நீங்கள் காத்திருக்கலாம். இது பங்குச் சந்தையில்  உள்ள மற்ற பொதுவான டிரேடிங்கான, ஒரு டிரேடிங் நாளுக்குள் பங்குகளை வாங்கி விற்கும் இன்ட்ராடே டிரேடிங்கிற்கு மாறாக உள்ளது. இன்ட்ராடே டிரேடிங்கில் நீங்கள் முழு விலையைச் செலுத்த வேண்டியதில்லை. மறுபுறம், டெலிவரியில் பங்குகளை வாங்க, உங்கள் கணக்கில் போதுமான நிதி தேவை, ஏனெனில் எந்த மார்ஜின்களும் வழங்கப்படுவதில்லை.

ஈக்விட்டி டெலிவரியில் முதலீடு செய்வதற்கான டிப்ஸ்கள் 

இப்போது ஈக்விட்டி டெலிவரி என்றால் என்ன என்று பார்த்தோம்; உங்கள் லாபத்தை அதிகரிக்கும் சில முதலீட்டு டிப்ஸ்களைப் பார்ப்போம்– 

மிக்ஸ் மற்றும் மேட்ச்– ‘உங்கள் அனைத்து முட்டைகளையும் ஒரே பாஸ்கெட்டில் வைக்க வேண்டாம்என்று கூறுவது பங்குகளுக்கும் பொருந்தக்கூடியது. ஒரு பங்கில் உங்கள் அனைத்து பணத்தையும் முதலீடு செய்யாதீர்கள். நீங்கள் பங்குகளை வாங்கும்போது, எப்போதும் ஒரு மிக்ஸ்டு பேக் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்து பல்வேறு துறைகளிலிருந்து பல்வேறு நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நம்பிக்கைக்குரியதாகக் கருதும் பல பகுதிகளைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் அந்தப் பகுதியில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களைத் தேர்வு செய்யவும்பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கும் ஏனெனில் அந்தத் துறைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நேர்மறையான செய்தி இருந்தால், அது உங்களுக்கான இலாபத்தை உறுதி செய்யும்.

பொறுமையாக இருங்கள்பங்குச் சந்தை மிகவும் நிலையற்ற ஒன்றாகும், எனவே, இது உங்கள் பொறுமையைத்  தொடர்ந்து சோதிக்கும். நீங்கள் வாங்கும் பங்குகளின் மதிப்பு குறைவதற்கான வாய்ப்பு எப்போதும் உண்டு. எல்லாப் பங்குகளின் விலைகளும் அவ்வப்போது ஏறி இறங்கும். விலைகள் கீழ்நோக்கிச் சரிவதைக் கண்டால், மோசமான நிலைக்குச் செல்வதை நினைத்து அச்சப்படாதீர்கள் மேலும் உங்கள் பங்குகளை விற்றுவிடுங்கள். இன்ட்ராடே டிரேடிங்கை விட டெலிவரி அடிப்படையிலான டிரேடிங் வழங்கும் பெரிய நன்மை என்னவென்றால், உங்கள் பங்குகளை விற்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட காலம் எதுவும் இல்லை. நீங்கள் அமைதியாக இருந்தால் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை இது அதிகரிக்கும். பெரும்பாலான வர்த்தகர்கள் பங்குகள் அவற்றின் விலையை அடையும் வரை காத்திருந்து பின்னர் விற்கின்றனர்

ஈக்விட்டி டெலிவரியின் நன்மைகள்

டெலிவரி அடிப்படையிலான டிரேடிங் பல நன்மைகளை வழங்குகிறது

  • குறிப்பிட்ட காலம் என்ற ஒன்று இல்லை என்பதால், சந்தை மோசமாக இருக்கும்போது நீங்கள் பங்குகளை வைத்திருக்கலாம், மற்றும் உங்களுக்குப்  பொருத்தமான விலையில் மட்டுமே அவற்றை விற்கலாம்.
  • சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் பங்குகளின் அடிப்படையில் கடன் வழங்குகின்றன. எனவே, நீங்கள் ஒரு கடினமான நேரத்தில் இருக்கும்போது, உங்கள் பங்குகள் உதவி செய்யும்.
  • ஒரு நிறுவனம் லாபம் அடைகிறது என்பதை நீங்கள் பார்த்தால், ஒரு பங்கிற்கு டிவிடென்ட்டை அறிவிக்கலாம். பின்னர், இந்த நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பது ஒவ்வொரு பங்கிலும் உங்கள் டிவிடென்டுகளுக்கான  லாபத்தினைப் பெற்றுத்தரும்.
  • உங்கள் பணத்தை வங்கியில் வைத்திருக்கும்போது, நீங்கள் அதிகமாக 9% அல்லது 10% ஆண்டு வட்டியை பெறுவீர்கள். இருப்பினும், வளர்ந்து வரும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், குறைந்தபட்சம் 15% வருமானம் பெற முடியும். சில பங்குகள் ஒரு வருடத்தில் 30 முதல் 40% வரை வருமானம் வழங்கும். நீங்கள் நீண்ட கால டிரேட் செய்யும்போது பங்குச் சந்தையில் சிறந்த லாபம் பெறலாம்.
  • ஒருவேளை ஒரு நிறுவனம் ஒரு பெரிய லாபம் அடைந்தால், அது போனஸ் பங்குகளை அறிவிக்கலாம். அவர்கள் 1:1 என்று அறிவித்தால், அதாவது உங்களிடம் உள்ள பங்குகளுக்கு இணையான பங்குகளை  நீங்கள் இலவசமாகப் பெறலாம்.

முடிவுரை 

நீங்கள் வாங்க திட்டமிட்டுள்ள நிறுவனங்களைப் பற்றி எப்போதும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பங்குகளின் விலை நியாயமான விலைக்குக் குறைவாக இருக்கும்போது அவற்றை வாங்க முயற்சிக்கவும். இது, நீங்கள் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எப்போது வாங்க வேண்டும், எப்போது விற்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வது ஒரு திறமையாகும், அது  இன்ட்ராடே டிரேடர்கள் மற்றும் டெலிவரி டிரேடர்கள் இருவருக்கும் உதவியாக இருக்கும்.

ஈக்விட்டி டெலிவரி கட்டணங்கள் என்றால் என்ன என்று நீங்கள் யோசிக்கலாம். சேவை வரி, முத்திரை வரி, வைப்புத்தொகை பங்கேற்பாளரின் கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்கள் நீங்கள் பங்குகளில் டிரேட் செய்யும்போது பொருந்தும்.